திண்டுக்கல்

கந்த சஷ்டி: சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக முருகன் கோயில்களில் புதன்கிழமை வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
 திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்துள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திண்டுக்கல் ரயிலடி சித்திவிநாயகர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டியையொட்டி, கடந்த 6 நாள்களாக சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, புதன்கிழமை வள்ளி - தேவசேனா ஆகியோருடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
 ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியின் தொடக்கமாக விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்ணியாகவாஜனம் நடைபெற்றது. பின்னர், முருகப் பெருமானுக்கு காப்புக் கட்டுதல் மற்றும் கும்ப பூஜை நடத்தப்பட்டது.  ஸ்ரீசூக்த பாராயணம் செய்து திருமாங்கல்ய பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வள்ளி தேவசோனா மற்றும் முருகப் பெருமானுக்கு மாலை மாற்றுதல் செய்யப்பட்டு, திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அக்னி பூஜைக்கு பின், வள்ளி தேவசேனா ஆகியோருக்கு முருகப் பெருமான் மிஞ்சி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 சிறப்புப் பூஜைக்கு பின் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயறு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், திருமண விருந்தாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT