திண்டுக்கல் பகுதி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள பள்ளிகளில், குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள பள்ளிகளில், குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
திண்டுக்கல் நாகல்நகர் கென்னடி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சிக்கு, இந்திய ஒருமைப்பாட்டு இயக்கத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். காந்திமன்ற பொதுச் செயலர் மருது முன்னிலை வகித்தார். விழாவில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் அப்துல்ரசாக், முதல்வர் மரகதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
வாசவி மெட்ரிக் பள்ளி: திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் பகுதியிலுள்ள வாசவி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் எம்.கல்யாணி தலைமை வகித்தார். இவ்விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு பள்ளி முதல்வர் திலகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின்போது, பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆசிரியர் பாட்டு பாடியும், நடனமாடியும் மகிழ்வித்தனர். 
விக்டரி மெட்ரிக் பள்ளி: சின்னாளப்பட்டி விக்டரி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் மலர்விழி தலைமை வகித்தார். இதில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர் குழுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி:  திண்டுக்கல் காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி மற்றும் திண்டுக்கல் மேற்கு சுழற்சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்கான காப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மேற்கு சுழற்சங்கத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி பத்மநாதன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பி.பாலாஜி சுப்பிரமணி, பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ஆர்.சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com