திண்டுக்கல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம்

DIN

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு புதன்கிழமை இரவு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.  
    பழனியில் கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை காப்புக்கட்டுடன் தொடங்கி ஒருவார காலம் நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு அடிவாரம் கிரிவீதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது.  மலைக்கோயிலில் புதன்கிழமை காலை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.  கோயில் வளாகத்தில் விநாயகர் அனுமதி, புண்யாவாசனம் நடத்தப்பட்டு சண்முகர் வேள்வி நடைபெற்றது.
 தொடர்ந்து பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை ஆகியன நடைபெற்றன. வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகை பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு  வெள்ளிக்கவசம், வண்ணப் பட்டாடை, மலர்மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  தொடர்ந்து மாங்கல்யத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டு மேள தாளம் முழங்க சிவாச்சார்யார்கள் வேதமந்திரம் இசைக்க  திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு சோடஷ உபச்சாரம் மற்றும் மஹாதீபாராதனை நடைபெற்றது.   விழா நிறைவில் பக்தர்களுக்கு திருமாங்கல்யம், சித்ரான்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டன.  இரவு முத்துக்குமாரசாமி தங்கக் குதிரை வாகனத்தில் 4 ரதவீதிகளில் எழுந்தருளினார்.
     திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT