திங்கள்கிழமை 10 டிசம்பர் 2018

"கஜா' புயலால் மின் கம்பங்கள் சேதம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

DIN | Published: 18th November 2018 01:18 AM

ஒட்டன்சத்திரம் பகுதியில் "கஜா' புயலால் மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 "கஜா' புயல் தாக்கியதால் விருப்பாச்சி, அரசப்பப்பிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, காப்பிலியபட்டி, அத்திக்கோம்பை உள்ளிட்ட பல கிராமங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பல கிராமங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க போதிய மின்சாரம் விநியோகிக்கப்படுவதில்லை. இதனிடையே கஜா புயலுக்கு முன்பு இருந்த தண்ணீரை வைத்து பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் இன்னும் ஓரிரு நாள்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் தீர்ந்து விட்டதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் வாரியம் துரிதமாக செயல்பட்டு முதற்கட்டமாக குடிநீர் தேவைக்கு பயன்படும் மின் விநியோகத்தை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More from the section

கொடைக்கானல் அருகே நிலத்தகராறு 3 பேருக்கு அரிவாள் வெட்டு
தேசிய கால்பந்து போட்டி: டிச.12 இல் மாநில அணி தேர்வு

பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையுடன் 
ஐயப்பப் பக்தர்கள் தரிசனம்

வத்தலகுண்டுக்கு  ஸ்ரீஸ்ரீ வித்யா விஜய தீர்த்த சுவாமிகள் வருகை

பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையுடன் 
ஐயப்பப் பக்தர்கள் தரிசனம்