பாடப் புத்தகங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: ஹெச்.ராஜா

பாடப் புத்தகங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என, பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா


பாடப் புத்தகங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என, பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட பாஜக இதர பிற்படுத்தப்பட்ட அணி சார்பில், வ.உசி. சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.கே. பழனிச்சாமி, இதர பிற்படுத்தப்பட்ட அணியின் தலைவர் கருப்புச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, ஹெச். ராஜா கலந்துகொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சிகளுக்கு பாஜக சார்பில் பாராட்டுகள்.
புயல் பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தால், மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதியை வழங்கும். பிரதமர் மோடி, தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புயல் பாதிப்பு குறித்து விசாரித்துள்ளார்.
ஆனாலும், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக வழக்கம்போல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் வரலாற்றை பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்து, இன்றைய மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை வளர்க்கவேண்டும் என்றார்.
அப்போது, பாஜக ஓபிசி அணியின் பொதுச் செயலர் துரைக்கண்ணன், மாவட்டச் செயலர் ஜி. தனபாலன் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com