புயல் சேதம் கணக்கெடுக்கும் பணி: பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்

கஜா புயல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பயிர் சேதப் பகுதிகள் குறித்து ஆய்வுக்கு வரும் அலுவலர்களிடம் தகுந்த ஆவணங்களுடன் விவரங்களை


கஜா புயல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பயிர் சேதப் பகுதிகள் குறித்து ஆய்வுக்கு வரும் அலுவலர்களிடம் தகுந்த ஆவணங்களுடன் விவரங்களை வழங்கி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக வாழை, தென்னை, நெல் மற்றும் இதர பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே, சேத விவரங்களை உடனடியாகக் கணக்கீடு செய்யுமாறு, தமிழக முதல்வர் சார்பில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட சேத விவரங்களை கணக்கீடு செய்ய வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் சேத விவரங்களை தகுந்த ஆவணங்களான படிவ விவரம், நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை அளித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பயிர் சேதங்கள் விடுபட்டிருப்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டணமில்லா தொலைபேசி எண்: 0451-1077, கட்செவி அஞ்சல் எண்: 75988-66000 மற்றும் 0451-2460320 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com