மாநில அளவிலான கேரம் போட்டிகள்: மதுரை, சென்னை மாணவர்கள் வெற்றி

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில், மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமானோர் வெற்றி பெற்றனர்.


திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில், மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமானோர் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கேரம் போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. மாவட்டத்துக்கு 12 பேர் வீதம் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 384 பேர் கலந்துகொண்டனர்.
இதில், 10 வயதுக்குள்பட்டோர் மற்றும் 18 வயதுக்குள்பட்டோர் என 2 பிரிவுகளில் மாணவர்கள் விளையாடினர்.
மாணவ, மாணவியருக்கு தனித்தனியே நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளை, மாவட்டக் கால்பந்து கழகச் செயலர் எஸ். சண்முகம் தொடக்கி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை 2ஆவது நாளாக போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.
போட்டிகளின் முடிவில், முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: 10 வயதுக்குள்பட்ட ஒற்றையர் பிரிவு: மாணவர்கள் எம். கிஷோர்(திருவாரூர்), கே. கேஷவ் கார்த்திக் (திருநெல்வேலி), ஆர்.கே. தேவேஷ்வர் (மதுரை).
மாணவிகள் பிரிவில், டி. செம்மொழி தமிழ் எழில் (சென்னை), ஆர். ரதினி(ஈரோடு), எஸ். ப்ரீத்தா பிரின்சி (நாமக்கல்).
மாணவர்கள் இரட்டையர் பிரிவில், ஏ. அப்துல்லா, எஸ். கோபிநாத் (சென்னை), வி. ஹரீஷ், கே. சஞ்சய் (திருவாரூர்), ஏ. தயாளன், ஏ. முகமது இர்பானுல்(திண்டுக்கல்).
மாணவிகள் இரட்டையர் பிரிவில், டி. தீர்த்தனா, எம். ஷாரூன் (திண்டுக்கல்), சி. தெனினா, சி. லீனா (சென்னை), டி. நித்யவல்லி, கே.ஆர். லேகா (மதுரை).
18 வயதுக்குள்பட்ட ஒற்றையர் பிரிவு மாணவர்கள், எம். கபிலன் (ராமநாதபுரம்), எம். கிஷோர் (திருச்சி), டி. பெலிக்ஸ் (திண்டுக்கல்).
மாணவிகள் பிரிவில், எஸ். ரோசினிஸ்ரீ (மதுரை), ஏ. சுஷ்மிதா (சென்னை), எம். சத்யா (திண்டுக்கல்).
இரட்டையர் பிரிவு மாணவர்கள்- என். ஜாய் மாதேஷ், ஏ.எஸ். ஸ்ரீபத்ரிநாத்(மதுரை), கே. அபாவ்சன், பி. மதன் (சென்னை), ஜெ.கே. கார்த்திகேயன், டி. யோகேஷ் (நாமக்கல்).
மாணவிகள் - எல். கீர்த்தனா, எம். காசிமா (சென்னை), ஆர். ராதிகா, ஜெ. அபிநயா (மதுரை), ஆர். ஜனனி ஸ்ரீ, எஸ். தீபிகா (திருவாரூர்).
இரட்டையர் பிரிவுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3ஆம் பரிசு ரூ. 2,500 வீதமும், ஒற்றையர் பிரிவுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.2,500, 3ஆம் பரிசு ரூ.1,500 வீதமும் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் என்.எம்.பி. காஜாமைதீன், நடைப்பயிற்சி கழகத் தலைவர் ஆர். சண்முகவேல் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. சௌந்தரராஜன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com