திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

கருணாநிதி மறைவால் அதிர்ச்சியில் இறந்த 15 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: அர.சக்கரபாணி எம்எல்ஏ வழங்கினார்

DIN | Published: 12th September 2018 05:29 AM

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 15 திமுக தொண்டர்களின் குடும்பத்துக்கு தலா  ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினரும், சட்டப்பேரவை திமுக கொறடாவுமான அர.சக்கரபாணி திங்கள்கிழமை  வழங்கினார்.
  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலவாடம்பட்டி- அ.துரைச்சாமி, கே.அத்திக்கோம்பை- சு.சரவணன், வேலூர் அன்னப்பட்டி-பொ.மதுரைவீரன், புலியூர் நத்தம்-ஆ.அருக்காணி, கரியாம்பட்டி- நா.கருப்பணன், மு.பழனிச்சாமி, மா.பழனிச்சாமி, ஆ.பாலகிருஷ்ணன், கோவிலம்மாபட்டி-கா.கண்ணியப்பன், பாளையம் (பேரூராட்சி)- பா.பிச்சைமுத்து, வேடசந்தூர் தொகுதி கூவக்காபட்டி ஊராட்சி ப.தங்கவேல், குடப்பம்பட்டி- ப.சிவபாக்கியம், கொசவபட்டி-நா.கிருஷ்ணன், வடமதுரை (பேரூராட்சி)- ம.ராஜலிங்கம்,  நத்தம் தொகுதி செந்துறை ஊராட்சி- ப.பெரியையா கவுண்டர் ஆகியோரது குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என திமுக அறிவித்து இருந்தது. அதன்படி திங்கள்கிழமை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அர.சக்கரபாணி, 15 பேரின் வீடுகளுக்கு சென்று அவர்களது வாரிசுகளிடம் தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். அப்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.இராஜாமணி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.தங்கராஜ், ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தி.தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் இரா.சோதிசுவரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆண்டிபட்டி: கருணாநிதி மறைவால் உயிரிழந்த, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த திமுக தொண்டர் தர்மகொடி மனைவியிடம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் வழங்கினார்.  
 

More from the section

மாநில அளவிலான கேரம் போட்டிகள்: மதுரை, சென்னை மாணவர்கள் வெற்றி
நிலக்கோட்டை பகுதியில் 40 ஆயிரம் வாழைகள் சேதம்: ஏக்கருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
புயல் சேதம் கணக்கெடுக்கும் பணி: பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்
பாடப் புத்தகங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: ஹெச்.ராஜா
கார்த்திகை திருவிழா: பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம்