18 நவம்பர் 2018

கொலை வழக்கில் கைதான 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

DIN | Published: 12th September 2018 05:28 AM

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை வெட்டிக் கொலை செய்த 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பா.செல்வக்குமார் கடந்த ஜூலை 31ஆம் தேதி பித்தளைப்பட்டி பிரிவு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 
இந்த கொலை வழக்கு தொடர்பாக சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான்(35), சி.முகமது காலித்(23), பி.முகமது சலீம்(30), 
கடலூர் மாவட்டம், திருப்பாப்புலியூர் பகுதியைச் சேர்ந்த ரா.சமீர் அலி(28) ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீஸார் கைது செய்தனர். 
 தற்போது இந்த 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், இந்த 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்துள்ளார். 
அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார்.
 

More from the section


கொடைக்கானல் மலைச்சாலையில்  துணை முதல்வர் ஆய்வு

மகர விளக்கு பூஜை சுருளி அருவியில் நீராடி ஐயப்பப் பக்தர்கள் விரதம் தொடங்கினர்
பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது: மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை
"கஜா' புயலால் மின் கம்பங்கள் சேதம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


பழனி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை