செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

தேனி, திண்டுக்கல்லில்  செப்.15-ல் சைக்கிள் போட்டி

DIN | Published: 12th September 2018 05:26 AM

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில், சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளன.  
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. சௌந்தரராஜன் தெரிவித்துள்ளது: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட அளவிலான சைக்கிள் விரைவுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. 13 வயதுக்குள்பட்டோர் பிரிவில், மாணவர்களுக்கு 15 கி.மீட்டர் தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டர் தொலைவும் போட்டி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் தொலைவும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று, செப்டம்பர் 15ஆம் தேதி காலை 6 மணிக்கு, மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு வரவேண்டும்.
தேனியில்: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செப்.15- ஆம் தேதி காலை 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.  இப்போட்டியில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.  போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும்.  போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் செப்.15 ஆம் தேதி காலை 7.15 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 

More from the section

பழனியில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம்: இஸ்லாமியர்கள் வரவேற்பு 


வத்தலகுண்டு அருகே கல்லூரி மாணவர்கள் மோதல்

திண்டுக்கல்லில் ரௌடி வெட்டிக் கொலை
திண்டுக்கல், கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி, வெண்டைக்காய் விலை குறைவு