புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

நத்தத்தில் 3 இடங்களில் தீ விபத்து: 2 பேர் கைது

DIN | Published: 12th September 2018 05:28 AM

நத்தத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் 2 இளைஞர்கள் பிடிபட்டனர்.
 திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வாழைப்பழ கிட்டங்கி, மூன்று லாந்தர் பகுதி மற்றும் பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 15 கடைகள் முழுமையாக தீயில் எரிந்து சாம்பலானது. மேலும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. ஒரே நேரத்தில் அடுத்தத்தடுத்து ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாகீர்(30), நத்தத்தைச் சேர்ந்த நாகூர்கனி (31) ஆகிய இருவருமே தீ விபத்துக் காரணம் என தெரிய வந்தது. இருவரையும் செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
 

More from the section

பழனியில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம்: இஸ்லாமியர்கள் வரவேற்பு 


வத்தலகுண்டு அருகே கல்லூரி மாணவர்கள் மோதல்

திண்டுக்கல்லில் ரௌடி வெட்டிக் கொலை
திண்டுக்கல், கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி, வெண்டைக்காய் விலை குறைவு