புதன்கிழமை 14 நவம்பர் 2018

பழனியில் சாரல் மழை

DIN | Published: 12th September 2018 05:27 AM

பழனியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்தது. 
   பழனியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது.  செவ்வாய்க்கிழமை மாலை லேசான காற்றுடன் சாரல் மழை சுமார் ஒருமணி நேரம் பெய்தது. மேகமூட்டம் காரணமாக இருள் சூழ்ந்ததால் மாலை நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. 
பள்ளி மாணவர்கள் குடைகள் இன்றி மழையில் நனைந்தபடியே சென்றனர். பழனி மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.  இதனால் நகரில் குளுமையான சூழல் நிலவியது.

More from the section

திண்டுக்கல்லில் அமைச்சர் முன்னிலையில் அதிமுக தொண்டர்கள் மோதல்


திண்டுக்கல், நவ. 13: திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் சீனிவாசன் முன்னிலையில் தொண்டர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
   திண்டுக்கல்லில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலர் வி.மருதராஜ் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாள

சீன உற்பத்தி பொருள்கள் ஆக்கிரமிப்பை மத்திய அரசு தடுக்க வேண்டும்: தம்பிதுரை
சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
டெங்கு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
ஒய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்