புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

பாலிடெக்னிக் ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி

DIN | Published: 12th September 2018 05:30 AM

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. கல்லூரி முதல்வர் கந்தசாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.  8 கல்லூரிகள் பங்கேற்றன. பூப்பந்தாட்டப் போட்டியில் கோவை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம், பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றன. டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் முதலிடம், தாராபுரம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு கல்லூரி தாளாளர் செந்தில்குமார் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
 

More from the section


கொடைக்கானலில் ரூ.7.25 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: நகராட்சி ஆணையர் தகவல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
கொடைக்கானலில் செப்டம்பர் 26 மின்தடை
கல்லறைச் சிலுவைகள் சேதம்: திண்டுக்கல்லில் சாலை மறியல்
திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் மழை