திண்டுக்கல்

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

DIN

ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்தூர் பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணகோரி திமுக எம்எல்ஏக்கள் அர.சக்கரபாணி, எம்ஏ.ஆண்டி அம்பலம் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட  ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொத்தையம் நல்லதங்காள் அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும், நத்தம் பகுதிக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அர.சக்கரபாணி, எம்.ஏ. ஆண்டி அம்பலம் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொத்தயத்தில் நல்லதங்காள் அணை கட்ட ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 80 சதவீத பணிகள்  நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. இதனை கண்டித்து, ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியும், பேரவையில் பதிவு செய்ததாலும், கூடுதலாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும், துரிதமாக பணிகள் நடைபெறவில்லை. 
220 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நல்லதங்காள் அணை, பயன்பாட்டிற்கு வந்தால் தொப்பம்பட்டி வட்டாரத்திலுள்ள 50 கிராம மக்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும். 300 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே நிலுவையிலுள்ள பணிகளை, வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக முடிக்க வேண்டும். 
அதேபோல், கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில், ஆத்தூர் மற்றும் நத்தம் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டி அமரபூண்டி இடையே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சாலை 4  நாள்களில் சேதமடைந்துவிட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட அளவில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT