பழனியில் திருநங்கைகளுக்கான  தொழிற்பயிற்சி தொடக்க விழா

பழனி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழிற்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

பழனி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழிற்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
 பழனி ஒன்றிய அலுவலகத்தில் சமூகநலத்துறை மற்றும் போகர் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற் நிகழ்ச்சிக்கு பழனி சார் -ஆட்சியர் அருண்ராஜ் தலைமை வகித்துப் பேசினார்.  பழனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். ஐசிஐசிஐ வங்கி மாவட்ட மேலாளர் வெங்கடேசன், போகர் தொண்டு நிறுவன அறங்காவலர் ஐயப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.  
நிகழ்ச்சியில் இருபதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். போகர் தொண்டு நிறுவன இயக்குநர் கார்த்திகாயினி வரவேற்றுப் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்திலேயே பழனியில்தான் திருநங்கைளுக்கு முதன்முதலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை  வழங்கப்பட்டது, ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு அவற்றை திருப்பி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்தார். 
பயிற்சி முகாமில் திருநங்கைகளுக்கு உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி வழங்கப்படும் என்றும், பயிற்சிக்குப் பின்  வங்கிகள் மூலமாக கடனுதவி செய்து தரப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.  பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறும், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேநீர் விடுதி நடத்த இடம் வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com