திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

திண்டுக்கல் அருகே மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
 திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு கிரியம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பெரியசாமியின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் குழு, அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியது. 
அப்போது அவரது கடையில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலைப் பொருள்கள் இல்லாததால் அக்குழுவினர், அந்த கடையின் பின்புறமுள்ள 11 வீடுகளில் சோதனை நடத்தினர். இதில், பெரியசாமிக்கு சொந்தமான வீடு மற்றும் மின் மோட்டார் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன்னுக்கும் கூடுதலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.  
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறியது: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 5 வகையான புகையிலைப் பொருள்கள் பெரியசாமியின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின், மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT