கொடைக்கானலில் ரூ.7.25 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: நகராட்சி ஆணையர் தகவல்

கொடைக்கானலில் ரூ. 7 கோடியே 25 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளதாக, நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் ரூ. 7 கோடியே 25 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளதாக, நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
கொடைக்கானலில் சாலை மற்றும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ. 7 கோடியே 25 லட்சம் செலவில் நடைபெற உள்ளன. இதில், ரூ 1 கோடியே 85 லட்சம் செலவில் நகர் பகுதிகளில் உள்ள 24 வார்டுகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆனந்தகிரி, கொய்யாப்பாறை, சிவனடி சாலை, நாயுடுபுரம் என  4 இடங்களில் நுண்ணுயிர் உரக் கிடங்கு அமைக்கப்படும்.  
அதில், மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாக தயாரித்து விற்பனை செய்யப்படும். மக்காத குப்பைகளை அரியலூர் பகுதியிலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். 
மேலும், இந்தப் பணிகளுக்காக ரூ. 45 லட்சம் செலவில் 8 ஜீப்புகள் வாங்கப்படும். கொடைக்கானல் அருகே உள்ள பிரகாசபுரம் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கில் 37,500 மெட்ரிக் டன் குப்பை கிடக்கிறது. இவற்றை ரூ. 2 கோடியே 45 லட்சம் செலவில் தூய்மைப்படுத்தப்பட உள்ளது. இந்தக் குப்பை கிடங்கை வேறு பணிகளுக்காக நகராட்சி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளும்.
 கொடைக்கானல் நகர் பகுதிகளில் குடிநீர் பிரச்னையை முற்றிலும் தீர்க்கும் வகையில், ஏற்கெனவே நகராட்சிக்குச் சொந்தமான குடிநீர்த் தேக்கத்தில் ரூ.10 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதனைத் தொடர்ந்து, செல்லபுரம் பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் குடிநீர்த் தொட்டி அமைக்கப்படும்.கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட  மிகவும் மோசமாக உள்ள நாயுடுபுரம், ஆனந்தகிரி, செண்பகனூர், குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் வழி ஆகிய சாலைகள் ரூ. 1 கோடி செலவில் சீரமைக்கப்படும். 
வீட்டுவரி செலுத்துபவர்கள் சொத்து மதிப்பை தெரியப்படுத்துவதற்காக நகராட்சி வளாகத்தில் சுயமதிப்பீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு படிவத்தை பூர்த்தி செய்து, நவம்பர் 24 ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com