திண்டுக்கல்

செம்பட்டி அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 13 பவுன் நகை, ரூ.1.37 லட்சம் திருட்டு

DIN

செம்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.37 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மூவேந்தர் காலனியைச் சேர்ந்தவர்  ராஜேந்திரன் (45). இவர் செம்பட்டி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ராஜேந்திரனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் திருச்செந்தூர் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளனர். வீட்டில் ராஜேந்திரன் மட்டும் இருந்துள்ளார். அவர் திங்கள்கிழமை மாலை பணம் வசூல் செய்வதற்காக வீட்டை வீட்டு வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளார். அப்போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த சுமார் 13 பவுன் தங்க நகை, ரூ.1.37 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து செம்பட்டி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT