பழனி நகராட்சிக்கு ரூ.1 கோடியில் வாகனங்கள்

பழனி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி துப்புரவு பணிக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.

பழனி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி துப்புரவு பணிக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.
பழனியில் 33 வார்டுகள் உள்ளன. மேலும் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் நகர் முழுவதும் ஆங்காங்கே அதிகளவில் குப்பைகள் தேங்குகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  பழனி நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு நான்கு சக்கர வாகனம் மற்றும் முப்பத்து ஏழு மூன்று சக்கர பேட்டரி வாகனங்களும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. 
இந்த வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தபட உள்ளது. மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து எடுத்துச்சொல்ல இந்த வாகனங்கள் பெரிதும் பயன்படும் என்றும், விரைவில் இந்த வாகனங்களுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு பழனி நகரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபடுவர் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com