திண்டுக்கல்

தைப் பூசத் திருவிழாவுக்கு 350 சிறப்பு பேருந்துகள்

DIN

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை சார்பில் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மேலாண்மை இயக்குநர் கே. சேனாதிபதி தெரிவித்துள்ளதாவது:
பழனியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திண்டுக்கல் மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட  பகுதிகிளிலிருந்து பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ஜனவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை 350 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தேனி, கரூர், நத்தம் ஆகிய பேருந்து நிலையங்களில், பக்தர்களுக்கு உதவுவதற்காக அலுவலர்கள் 
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT