பேத்துப்பாறை பகுதியில் பாலப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த பாலத்துக்குப் பதில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க அப் பகுதி


கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த பாலத்துக்குப் பதில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் கஜா புயலின் போது பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. அதே போல் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியிலும் சாலைகள் சேதமடைந்ததுடன் பேத்துப்பாறையிலிருந்து ஐந்து வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பாலமும் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது கடந்த ஒரு வாரமாக பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பேத்துப்பாறை பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது: பேத்துப் பாறையில் உள்ள பாலம் முக்கியமான பாலம். இங்கிருந்து தான் பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது அப்பாலத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், வருவாய்த்துறையினரிடமும் தகவல் தெரிவித்துள்ளோம். 
எனவே விரைந்து பேத்துப்பாறை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com