படைப்புழு தாக்குதலுக்குள்ளான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம் பகுதியில் படைப்புழு தாக்குதலுக்குள்ளான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் படைப்புழு தாக்குதலுக்குள்ளான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பொருளூர் கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மூத்த விவசாயி தீர்க்ககவுண்டன்வலசு கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். 
விவசாயிகள் கருப்புச்சாமி, சண்முகவேல், முருகசாமி, சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதி எம். ராமசாமி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கஜா புயல் மற்றும் படைப்புழு தாக்குதலுக்குள்ளான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். 2016-ஆம் ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், பொருளூர், வாகரை, மேட்டுப்பட்டி, மரிச்சிலம்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com