அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வத்தலகுண்டு அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கருப்புக் கொடி ஏந்தி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்தலகுண்டு அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கருப்புக் கொடி ஏந்தி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 வத்தலகுண்டு அடுத்துள்ள கோம்பைப்பட்டி கிராமத்தில் சுமார் 2ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்துக்கு கடந்த 18 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்க வில்லை என புகார் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், வீதிகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகக் கூறி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியது: கோம்பைப்பட்டி கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிட்டது. அந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து கொடுக்காததால், குடிநீருக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 அதேபோல், கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுதொடர்பாக ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 எங்கள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கும் முடிவினை எடுத்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com