பிளாஸ்டிக் தடை: ஒரே நாளில் 335 கடைகளுக்கு ரூ.1.45 லட்சம் அபராதம்

மதுரையில் பிளாஸ்டிக் பொருள்கள் தடை தொடர்பான சோதனையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில்

மதுரையில் பிளாஸ்டிக் பொருள்கள் தடை தொடர்பான சோதனையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 335 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் ரூ.1.45 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் 870 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி  மதுரை மாநகராட்சிப் பகுதியில்  டிசம்பர் 10 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், நாகராஜ் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் 20 பேர், தூய்மைக் காவலர்கள் 35 பேர், சுகாதார மேற்பார்வையாளர்கள் 100 பேர்,  20 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
இதில் 335 கடைகளுக்கு ரூ.1.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளில் இருந்த 870 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கெனவே பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர் ஆய்வு இல்லாததால், அங்கும் படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாடு தாரளமாக இருந்தது. அப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஆய்வில் 53 கடைகளில் இருந்து 130 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் உள்ள கடைகள் , மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம், மலர் சந்தை ஆகிய பகுதிகளிலும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
மேற்படி கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழி படிவம் பெறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com