மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்: 130 பேர் கைது

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
       மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வது,  ஒப்புக் கொண்ட தினக்கூலி ரூ.380 வழங்குவது, ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ.புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.        மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மதுரைத் திட்ட தலைவர் ஏ.வீரணன் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
    மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com