மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 16) அம்மா திட்ட முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: கள்ளிக்குடி - எஸ்.வெள்ளாகுளம், மேலூர் - கிழவிகுளம், உசிலம்பட்டி - புல்லனேரி, மதுரை கிழக்கு - புதுப்பட்டி, வாடிப்பட்டி - முள்ளிப்பள்ளம், திருமங்கலம் - பழக்கா புதுப்பட்டி, மதுரை வடக்கு - பேச்சிகுளம், பேரையூர் - மங்களரேவு, மதுரை தெற்கு - புளியங்குளம், திருப்பரங்குன்றம் - தனக்கன்குளம்.