மதுரை மாவட்டத்தில் 2 ஆம் போக சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்: பாசன நீர் இருப்பு குறித்து ஆலோசிக்க வேண்டுகோள்

மதுரை மாவட்டத்தின் இருபோக பாசனப் பகுதிகளில் இரண்டாவது போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தின் இருபோக பாசனப் பகுதிகளில் இரண்டாவது போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
பெரியாறு பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் இருபோகம் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இருபோக பாசனப் பகுதிகளான மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, வாடிப்பட்டி ஆகிய வட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கரிலும், ஒருபோக பாசனப் பகுதிகளான மேலூர், திருமங்கலம் வட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி நடைபெறும். இருபோக சாகுபடி பகுதியின் முதலாவது போகத்துக்கு ஜூன் மாதத்திலும், ஒரு போக சாகுபடி பகுதிக்கு செப்டம்பரிலும் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். 
ஒருபோக சாகுபடி பகுதிக்கு 120 நாள்கள் தண்ணீர் வழங்கப்பட்ட பிறகு, இருபோக பகுதியின் 2-ஆவது போகத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும்.
 பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ் ஆண்டில் முதல்போகத்துக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வட்டங்கள் நெல் சாகுபடி செய்யப்பட்டு 60 சதவீதத்துக்கு மேல் அறுவடை முடிந்துவிட்டது.
தற்போதுஒருபோகசாகுபடிபகுதிக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு, நெல் சாகுபடிக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இரு போக சாகுபடி பகுதியில்முதல்போக அறுவடை முடிந்த நிலையில், 2-ஆவது போகத்துக்கான ஆரம்பகட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வாடிப்பட்டி வட்டத்தில் சோழவந்தான், மண்ணாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் பல விவசாயிகள் விதைப்பு பணியை முடித்துவிட்டனர். சில பகுதிகளில் உழவு நடைபெற்று வருகிறது. இப் பகுதியில் இருக்கும் நீர்நிலைகளிலும், கிணறுகளிலும் நீர்இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் விவசாயிகள் 2-ஆவது போக நெல் சாகுபடி பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். 
இருப்பினும் வாடிப்பட்டி வட்டத்தின் சில பகுதிகள், மதுரை வடக்கு மற்றும் மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கும் இருபோக பகுதிகள் பெரியாறு கால்வாயில் நேரடிப் பாசனம் பெறுபவையாக இருக்கின்றன. ஆகவே, பெரியாறு அணையில்நீர் இருப்புநிலவரத்தை வைத்தே இரண்டாம் போக பணிகளை விவசாயிகள் தொடங்க முடியும்.
 தற்போது ஒருபோக பகுதிக்கும், பூர்வீக பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இரண்டாவது போகத்துக்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்பது இருபோக பகுதி விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.
இரண்டாவது போக சாகுபடி தொடர்பாக, அணைகளின் நீர்இருப்பு தொடர்பாகவும், நெல் சாகுபடி பணிகளைத் தொடங்குவது குறித்தும் தெளிவுபடுத்த விவசாயிகள், பொதுப்பணித் துறையினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துமாறு பெரியாறு பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு அணை நீர் இருப்பு குறைக்கப்படுகிறதா?
பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திறப்பதில் பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து விதிகளை மீறி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனு: பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து முரண்பாடான தகவல்களை அரசுக்குத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் அனுப்பி வருகின்றனர்.
பெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு வந்து, வைகை அணையில் உபரி நீர் இருப்பதாகக் கணக்கு காட்டி வருகின்றனர். பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து குறைத்து வருவதால், அந்த அணையை நம்பியுள்ள பாசனப் பகுதிகளின் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com