ரயில் நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள்

மதுரை ரயில் நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

மதுரை ரயில் நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
 பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் மதுரை ரயில் நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் தெளிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தின் பயணிகள் காத்திருப்பு அறை, பயணச்சீட்டு பதிவு மையங்கள், நடைமேடைகள், உணவகங்கள், கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன.
 மாநகராட்சி சுகாதார அதிகாரி சரோஜா, ரயில் நிலைய இயக்குநர் போயா ராகவேந்திர குமார், ரயில்வே சுகாதார அதிகாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com