சிறுபான்மையினர் நலத்துறையின் உதவிகள் பெற முஸ்லிம் மகளிர் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினர் நலத்துறையின் நலத் திட்டங்களைப் பெற முஸ்லிம் மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறையின் நலத் திட்டங்களைப் பெற முஸ்லிம் மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் க.விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக 
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் இஸ்லாமிய மகளிருக்கு நலத்திட்டங்கள் வழங்க மனுக்கள் பெறப்படுகின்றன.  நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 18-லிருந்து 45 வயதுக்கு உள்பட்ட முஸ்லிம் மகளிராக இருக்க வேண்டும். விதவையருக்கு முன்னுரிமை உண்டு. பிற்படுத்தப்பட்டார் திட்டத்தின்கீழ் தையல் இயந்திரம் போன்ற உதவிகளை ஏற்கெனவே பெற்றிருக்கக் கூடாது.
 ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.72 ஆயிரம், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மூலம் தையல் பயின்ற சான்று, சாதிச்சான்று, ரூ.10-க்கு அஞ்சல் வில்லை ஒட்டிய தாளில் சுய விவரம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில் தையல் இயந்திரம், கிரைண்டர், மிக்ஸி, மருத்துவ உதவி காப்பீடு, திருமண உதவி, சிஎப்எல் விளக்கு அமைத்தல் வசதி, சிறுவாகனம் மற்றும் தொழில் கருவிகள், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம், பாய் நெய்தல்,  சுயஉதவிக் குழு கடனுதவி உள்ளிட்ட அரசு உதவிகள் பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com