குயின்மீரா சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தின கலைப் போட்டிகள்

மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான

மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான பல்வேறு கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
 மழலையர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் குயின் மீரா சர்வதேச பள்ளியில் 2015 முதல் தி லிட்டில் எம்பரர் என்ற கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நான்காவது ஆண்டாக,  சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 115 பள்ளிகளைச் சேர்ந்த மழலையர் வகுப்பு  மாணவர்கள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். 
  நவீன ஆடை அணிவகுப்பு, குழு நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 9 போட்டிகள் நடத்தப்பட்டன. 3 வயதுக்கு உட்பட்டவர்கள், 3 முதல் 4 வயது உடையோர், 4 முதல் 5 வயது உடையோர் என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.
   ஒட்டுமொத்த போட்டிகளில் தேனி வேலம்மாள் போதி வளாக சிபிஎஸ்இ பள்ளி முதலிடத்தைப் பெற்றது.  மதுரை பிரின்ஸ் நர்சரி பள்ளி மற்றும் விரகனூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றன.  ஓம் சாதனா பள்ளி,  அனுப்பானடி வேலம்மாள் பள்ளி, செயின்ட் மைக்கேல் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டன.
  முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.  தனிப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வர்த்தகப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜெ. விக்னேஷ்குமார், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
 பள்ளி தாளாளர் சி. சந்திரன், இயக்குநர் அபிநாத் சந்திரன், பள்ளி முதல்வர் சுஜாதா குப்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com