மதுரை

தோப்பூரில் எய்ம்ஸ், பஸ்போர்ட்' அதிகாரிகள் ஆய்வு

DIN


திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பஸ்போர்ட்' அமைய உள்ள பகுதிகளை மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
தோப்பூரை அடுத்த கோ. புதுப்பட்டி கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டி ல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. இதையடுத்து மத்திய கட்டுமானக்குழுவினர் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மண் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் இருக்கும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை இடம்மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் தலைமை யில், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன், மின்வாரியம், பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (குழாய் பதிப்பு) மேலாளர் ஸ்ரீனிவாசன், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், வட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். மேலும் கரடிபட்டி பகுதியில் பஸ்போர்ட்' அமைப்பது தொடர்பாகவும் தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT