18 நவம்பர் 2018

சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN | Published: 12th September 2018 09:46 AM

பாரதியாரின் 97 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதியாரின் 97 ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
 பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மாலை அணிவித்தனர். இதில் வாரிய உறுப்பினர் இல.அமுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
   பாரதி தேசியப் பேரவை மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் அதன் மாநிலப் பொதுச்செயலர் க.ஜான்மோசஸ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கே.பாக்கியத்தேவர், எம்.ஜெயப்பிரகாசம், பி.சேகர் உள்ளிட்டோர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மாலை அணிவித்தனர்.
 நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தேசிய வலிமை வே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பாரதி சிலைக்கு மாலை அணிவித்தனர். 
 பாரதியார் போல வேடம்: அமுதசுரபி மன்றம் சார்பில் அலுவலகத்தில் பாரதி படத்துக்கு மன்றத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதி போல வேடமணிந்து வந்திருந்தனர்.
 நிகழ்ச்சியில் பாரதியை தேசியக் கவியாக அறிவிக்கவேண்டும். அவரது ஆளுயர சிலையை மாநகரின் முக்கிய இடத்தில் அமைக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 நிகழ்ச்சியில் மன்றத் துணைத்தலைவர் மு.தங்கமணி வரவேற்றார். புலவர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாரதியார் வேடமணிந்த மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள் நூல் இலவசமாக வழங்கப்பட்டன. 

More from the section

மணிமுத்தாறில் மணல் திருட்டு 6 பேர் கைது: வேன் பறிமுதல்


குயின்மீரா சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தின கலைப் போட்டிகள்

"கஜா' புயல்: பயிர் சேதங்களை கணக்கிடும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு


மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி: ஜெயின் வித்யாலயா பள்ளி சாம்பியன்

மின் திருட்டு: ரூ.61 ஆயிரம் அபராதம்