சனிக்கிழமை 17 நவம்பர் 2018

தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா:  நாளை கொடியேற்றம்

DIN | Published: 12th September 2018 09:45 AM

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலின் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. 
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலுக்குச் சொந்தமான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி பெருந்திருவிழா  வியாழக்கிழமை (செப்.13) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வியாழக்கிழமை காலை 7.45 மணி முதல் 8.30 மணிக்குள் கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி, பிராட்டியருடன் எழுந்தருள்கிறார். விழா நாள்களில் தினமும் காலையில் கிருஷ்ண, ராம, ராஜாங்க சேவை, காளிங்க நர்த்தனம், மோகனம் சேஷ சயனம் ஆகிய அவதாரங்களிலும் சுவாமி எழுந்தருள்கிறார். மாலை நேரங்களில் அன்னம், சிம்மம், அனுமார், கருட மற்றும் யானை போன்ற வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.    சிறப்பு விழாக்களாக வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் கஜேந்திர மோட்சமும், வரும் 19 ஆம் தேதி புதன்கிழமை மாலை புஷ்பக விமானத்திலும் சுவாமி எழுந்தருள்கிறார். மேலும், வரும் 20 ஆம் தேதி வெண்ணெய் தாழி நிகழ்ச்சியும், 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டமும் நடைபெறுகிறது. 
வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை கோயிலின் திருமுக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவு சப்தாவர்ணத்தில் சுவாமி பிராட்டியருடன் எழுந்தருள்கிறார். இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் 12 மணிக்குள் கோயில் அருகேயுள்ள திருமுக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. 
 திருமுக்குளத்தில் நடப்பாண்டில் தண்ணீர் இல்லாத காரணத்தால் நிலைத் தெப்பமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான விழாவை அடுத்து வரும் 24 ஆம் தேதி திங்கள்கிழமை தீர்த்தவாரியுடன் புரட்டாசிப் பெருந்திருவிழா நிறைவடைகிறது. 
 விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் செ.மாரிமுத்து ஆகியோர் செய்துள்ளனர்.

More from the section

திருநகரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திருப்பரங்குன்றம் கண்மாய்களை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு
இயற்கை வள பாதுகாப்பு நாளை விழிப்புணர்வு ஓட்டப் பந்தயம்
மேலூரில் சூறாவளி: 12 வீடுகள், 45 ஏக்கரில் பயிர்கள் சேதம்
கொள்முதலுக்கு வந்த நெல் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை