திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

திருமங்கலம், கப்பலூர் பகுதியில் வரும் 15 ஆம் தேதி மின்தடை

DIN | Published: 12th September 2018 09:46 AM

திருமங்கலம், கப்பலூர் பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திருமங்கலம் செயற்பொறியாளர் வி.ரமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டம் திருமங்கலம் துணைமின்நிலையத்தில் வரும் 15 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல்  2 மணி வரை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: திருமங்கலம் நகர்ப்பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி.
 கப்பலூர்: வரும் சனிக்கிழமை (செப்.15) கப்பலூர் துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: கப்பலூர், தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
 மின் பகிர்மானக்கழகம் அறிவிப்பு: மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் சு.இளம்பரிதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மழைக்காலங்களில் பழுதடைந்த மற்றும் அறுந்துகிடக்கும் மின்கம்பிகளைத் தொடக்கூடாது. மழையில் இடி,  மின்னலின் போது தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர்,கணினி மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பயன்படுத்தவேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு ஆகியவற்றின் அருகில் இருக்கவேண்டாம். மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டவோ, துணிகளைக் காயவைக்கவோ வேண்டாம். மின்சார தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கவேண்டாம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வெளியிட்டுள்ளார்.

More from the section

தோப்பூரில் எய்ம்ஸ், பஸ்போர்ட்' அதிகாரிகள் ஆய்வு
மனைவி தற்கொலை: கணவர், மாமியார் கைது
மணிமுத்தாறில் மணல் திருட்டு 6 பேர் கைது: வேன் பறிமுதல்


குயின்மீரா சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தின கலைப் போட்டிகள்

மின் திருட்டு: ரூ.61 ஆயிரம் அபராதம்