வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

மேலூர் அருகே கோயில்  திருவிழா: ஏழை காத்த  அம்மனாக சிறுமிகள் தேர்வு

DIN | Published: 12th September 2018 09:47 AM

வெள்ளலூர் பகுதியில் ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை யொட்டி அம்மனாக 7 சிறுமியரை செவ்வாய்க்கிழமை தேர்வு செய்தனர்.
இத் திருவிழாவில் 7 சிறுமியரை ஏழை காத்த அம்மனாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதற்காக பாரம்பரிய வழக்கப்படி வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களில் வசிக்கும் மக்கள் கரை வரிசைப்படி சிறுமியர்கள் வெள்ளலூரில் உள்ள கோயிலில் திரண்டனர். அதில் 7 சிறுமியரை அம்மனாக கோயில் பூசாரி சின்னத்தம்பி தேர்வு செய்தார்.
  செவ்வாய்க்கிழமை முதல் இச்சிறுமியர் கோயில் வீட்டிலேயே தங்கியிருப்பர். மேலும், இப்பகுதி மக்கள் 15 நாள்களுக்கு விரதம் மேற்கொள்வர். கோயில் வீட்டிலுள்ள 7 சிறுமியரும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொள்வர். 15 ஆவது நாளில் மண் கலயத்தில் பால் ஊற்றி, அதில் தென்னம்பாளையை வைத்து மது எடுப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படும். மது கலயங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வருவர்.

More from the section

முன்னாள் வங்கி மேலாளர் குடும்பத்தினரிடம் 
ரூ.50 லட்சம் மோசடி

சாலை வசதி, குடிநீர் வசதிக் கோரி உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் மறியல்
தமிழக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
மதுரையில் சிறைக்காவலர்களுக்கான பதவி உயர்வு தேர்வு
கல்லூரி விடுதிகளில் ராகிங் தடுப்புக் குழு திடீர் ஆய்வு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்