விருது வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி வீரர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு

விளையாட்டு வீரர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் தயான்சந்த்விருது வழங்கக் கோரி மதுரை மாற்றுத்திறனாளி

விளையாட்டு வீரர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் தயான்சந்த்விருது வழங்கக் கோரி மதுரை மாற்றுத்திறனாளி வீரர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்க மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 மதுரை கோ.புதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:  நான் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்துவருகிறேன். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளேன்.  சர்வதேச அளவில் 10 தங்கப்பதக்கம், 6 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளேன்.
 கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் உள்ளேன். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் தாயன்சந்த் சாதனை விருதுக்கு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. அனைத்துத் தகுதியிருந்தும் எனது பெயர் விருதுக்கு தேர்வாகவில்லை.  
 இந்நிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. அதில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த விழாவுக்குத் தடை விதித்தும், எனக்கு விருது வழங்கவும் உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 மனுவானது நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதன்படி மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை செயலர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com