மதுரை

மதுரை மாவட்டத்தில் 1531 பேர் திறனறித் தேர்வில் பங்கேற்பு

DIN

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசியத் திறனறித் தேர்வில் 1,531 பேர் எழுதியுள்ளனர். 
  எட்டாம் வகுப்பு முடித்தவர்களில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு தேசியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 60 மதிப்பெண்களுக்கு மேலாக பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையாக ஆண்டு தோறும் நிதி வழங்கப்படுகிறது.  மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.கே.என். பள்ளி, மதுரை மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேசியத் திறனறித் தேர்வுகள் நடைபெற்றன.
 இரு பிரிவுகளாக நடைபெற்ற தேர்வில் பங்கேற்க பதிவு செய்தவர்களில் 1,531 பேர் தேர்வை எழுதினர். 273 பேர் வரவில்லை. தேர்வுகளுக்குரிய மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT