மதுரை

இன்று "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்

DIN

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் தென்னமல்லூர், மேலூர் வட்டம் சாத்தமங்கலம் (வெள்ளலூர் உள்வட்டம்) அம்மா திட்ட முதலாம் சுற்றும், உசிலம்பட்டி வட்டம், பொருப்பு மேட்டுப்பட்டி (சிந்துபட்டி உள்வட்டம்), மதுரை கிழக்கு வட்டம் அங்காடி மங்கலம் பிட்-1(குன்னத்தூர் உள்வட்டம்), வாடிப்பட்டி வட்டம் நாச்சிகுளம் (தென்கரை உள்வட்டம்), திருமங்கலம் வட்டம் அலப்பலச்சேரி (பன்னிக்குண்டு உள்வட்டம்) அம்மா திட்ட நான்காம் சுற்றும், மதுரை வடக்கு வட்டம் ஆனையர் பிட்-2,  பேரையூர் வட்டம் அதிகாரிபட்டி (சேடப்பட்டி உள்வட்டம்) அம்மா திட்டம் ஐந்தாம் சுற்றும், மதுரை தெற்கு வட்டம் அவனியாபுரம்(அவனியாபுரம் உள்வட்டம்), மதுரை மேற்கு வட்டம் கொக்குளப்பி (மேல்மதுரை உள்வட்டம்), திருப்பரங்குன்றம் வட்டம் தோப்பூர்(திருப்பரங்குன்றம் உள்வட்டம்) அம்மா திட்டம் ஆறாம் சுற்றும் நடைபெறுகின்றன. அந்தந்த கிராமங்களில் நடைபெறும் அம்மா திட்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளுக்கு மனு அளித்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT