தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள்

மதுரையில் மாவட்ட அளவில் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மதுரையில் மாவட்ட அளவில் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
 தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் மதுரை செளராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதன் தொடக்க விழாவுக்கு, மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். மேலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்முத்துவேல் மற்றும் சௌராஷ்டிரா பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் மதுரை மாவட்ட அளவில் 54 பள்ளிகளை சேர்ந்த 312 தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஓவியப்போட்டி, விநாடி வினா, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளின் நடுவர்களாக ஓவிய ஆசிரியர்கள் ரவி, கண்ணன், ஹரிபாபு, விஜயராணி, கஸ்தூரி,  மகேந்திரபாபு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  போட்டிகளில் வெற்றி பெறும் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியர் 18 பேருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூழல் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேசிய பசுமைப்படை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com