சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர், காவல் ஆணையர் ஆலோசனை

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் சித்திரை திருவிழா தொடங்குகிறது. இதனையொட்டி ஏப்ரல் 15-இல் அருள்மிகு  மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 16 இல் திக் விஜயமும், 17ஆம் தேதி திருக்கல்யாணமும், 18-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். 
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாநகர காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்னன், மாநகராட்சி ஆனையர் ச.விசாகன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அன்று மதுரையில் திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பற்றி ஆலோசனைக்கூட்டம்  நடத்தப்பட்டது. திருவிழா மற்றும் தேர்தல் ஒரே நேரத்தில் வருவதால் இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
விழாவிற்காகவும், தேர்தலுக்காகவும் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்த கேட்கப்பட்டுள்ளது.  கள்ளழகர் வைகையற்றில் இறங்குவதற்காக 8 மணி நேரத்திற்கு முன்பாகவே மதுரைக்கு தண்ணீர் வருவதற்கு, வினாடிக்கு  216 கன அடி தண்ணீர் வைகையாற்றில் திறக்கப்பட உள்ளது.  கூடுதலாக மருத்துவ குழு மற்ற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.  தேர்தல் வேறு திருவிழா வேறு இரண்டிற்கும் முக்கியத்துவம் குறையாத வகையில் சிறப்பாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்,
திருத்தேரோட்டம்  நடைபெறும் பகுதியில் தேர் கடந்து செல்லும் பகுதிகளில் உடனடியாக  மின் இணைப்பு வழங்கப்படும். இதனால் வாக்குச்சாவடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மின்சார இணைப்பு இல்லாத நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படும்,
வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டு இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com