உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தேனி மக்களவை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதுரைமாவட்ட செயலர் இ.மகேந்திரன் நகரச் செயலர் குணசேகரபாண்டியன் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்க தமிழ்ச்செல்வன் செக்கானூரணியில் உள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.