ராமநாதபுரம்

வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் கைது

DIN


ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் காந்திநகரில் 1,404 சதுர அடியில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் பச்சமால், ஊராட்சி செயலராக பணியாற்றும் மாணிக்கம் ஆகிய இருவரும் வீடு கட்ட அனுமதி வழங்க ஒரு சதுர அடிக்கு நூறு ரூபாய் வீதம் ரூ.1.40 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தன்னிடம் இவ்வளவு பணம் இல்லை எனவும், ரூ. 20 ஆயிரம் தருகிறேன் என சண்முகம் கூறியுள்ளார். அதற்கு ஒத்துக் கொள்ளாமல் ரூ. 50 ஆயிரம் கேட்டுள்ளார்.
இது குறித்து சண்முகம், அவருடைய உறவினர் ராமமூர்த்தி ஆகியோர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். அப்போது சண்முகமும் ராமமூர்த்தியும் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைமாலிடமும், திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்திடமும் பணம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், காவல் துறை ஆய்வாளர்கள் ஜானகி, வானதி ஆகியோர் விரைந்து சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.45ஆயிரத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT