குரூப் 2 தேர்வு: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 15,129 பேர் எழுதினர்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 முதல் நிலைத் தேர்வை 15,129 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 முதல் நிலை எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய 3 ஊர்களிலும் 37 இடங்களில் 47 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் 11, 294 பேருக்கு நுழைவுச் சீட்டு அனுப்பட்டிருந்தது. இதில் 8,499 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 
தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் தேர்வு நடைபெறும் இடங்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் பேருந்து வசதிகளும், தேர்வு மையத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியனவும் செய்யப்பட்டிருந்தது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை அந்தந்தப் பகுதியில் உள்ள கருவூலங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதே போல வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 9 நகர்வுக் குழுக்களும், தேர்வின் போது முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 5 பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பரமக்குடி சார் ஆட்சியர் ப.விஷ்ணுசந்திரன், வட்டாட்சியர்கள் பரமசிவன்(பரமக்குடி) பொன்.கார்த்திகேயன் (ராமநாதபுரம்) ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் 35 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதல் நிலைத் தேர்வினை 6 ஆயிரத்து 630 பேர் எழுதினர். 
இத்தேர்வுக்கு சிவகங்கை மாவட்டத்திலிருந்து 9 ஆயிரத்து 96 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை (17), காரைக்குடி (14), தேவகோட்டை (4)ஆகிய பகுதிகளில் உள்ள 35 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தேர்வில்  6 ஆயிரத்து 630 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 466 பேர் தேர்வு எழுத  வரவில்லை. இந்த தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com