சாயிகள் நவ.30-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

நெற்பயிர் விவசாயிகள் வரும் 30 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

நெற்பயிர் விவசாயிகள் வரும் 30 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நெற்பயிர் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டம் உள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் 400 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.
கடன் பெறா விவசாயிகளாக இருந்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வரும் 30 ஆம் தேதி கடைசி நாள். எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி, முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பயிர்க்காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும், அதாவது ஏக்கருக்கு ரூ.341 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதும்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை  இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பொதுச்சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com