திங்கள்கிழமை 10 டிசம்பர் 2018

"தமிழக இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும்'

DIN | Published: 15th November 2018 01:19 AM

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக  வைப்புத் தொகை (டெபாசிட்) இழக்கும் என அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். 
கமுதியில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்யவும், வாக்காளர்களுக்கு வாக்களிக்க தலா ரூ.10 ஆயிரம் வீதம் கொடுக்கவும் திட்டமிட்டடுள்ளதாக தெரிகிறது. ஆனால் மக்கள் அதை பெற்றுக் கொண்டு குக்கர் சின்னத்தில் தான் மக்கள் வாக்களிப்பார்கள். இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் (வைப்புத் தொகை) இழக்கும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய  7 பேர் பற்றிய பத்திரிகையாளர்கள் கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. 
மேலும் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின் போது அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கிழித்து சேதப்படுத்தியதாக அமமுகவினர் மீது வழக்கு பதிந்த காவல்துறை ஏன் பதாகைகளை கிழிக்கும் போது தடுக்க வில்லை என்றார்.

More from the section

தமிழகத்தில் வருவாய்த்துறை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
கமுதி அருகே அரசு நூற்பாலை தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
பள்ளி சார்பில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி
உலக மண்வள தினவிழா
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்  நகை, பணம் திருட்டு