கோட்டை முனீஸ்வரர் கோயில் தோரண வாயில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேட்டில் உள்ள கோட்டையில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோயில்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேட்டில் உள்ள கோட்டையில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோயில் நுழைவு தோரண வாயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவினை முன்னிட்டு தோரணவாயில் முன்பு யாகசால பூஜை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாஜனம், மஹாகணபதி ஹோமம், தன பூஜை, மஹாலட்சுமி ஹோமம்,  வாஸ்து சாந்தி, நவகிரஹ ஹோமம், சாந்தி ஹோமம், திசா ஹோமம்,  தீபாராதனை நடைபெற்றது.  இதனையடுத்து தோரணவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கும்பங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  பின்னர் தென் மண்டல ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் தோரண வாயிலை திறந்து வைத்தார்.  டி.ஐ.ஜி., காமினி, மாவட்ட எஸ்.பி., ஓம்பிரகாஷ்மீனா, கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர்கள் சரவணன் (கமுதி), ஜான்சிராணி (அபிராமம்), லட்சுமி (பெருநாழி) உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com