திருவாடானை பகுதியில் பயிர் காப்பீடு செய்ய வங்கிகள் மறுப்பு: விவசாயிகள் புகார்

திருவாடானை அருகே தொண்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில்

திருவாடானை அருகே தொண்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய மறுத்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இயற்கை பேரிடர், மழை வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது இதில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்தாண்டு இழப்பீடு தொகை பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இருப்பினும் கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்  உத்தரவின்பேரில் நடப்பு சம்பா பருவத்தில் வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பயிர்க் காப்பீடு செய்யலாம் என்று தெரிவித்துள்ள நிலையில் தற்போது தொண்டியில் உள்ள வங்கிகள் பயிர் காப்பீடு செய்ய மறுத்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சின்னத்தொண்டியை சேர்ந்த விவசாயி கண்ணன்  கூறியது: கடந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பிரீமியம் செலுத்தி உள்ளேன். ஆனால் இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய வங்கிகள் மறுத்து வருகின்றன. இதுபற்றி வங்கி அதிகாரியிடம் கேட்ட போது மேலிடத்து உத்தரவு வராமல் வாங்க முடியாது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் நவ. 30-க்குள் மாவட்ட ஆட்சியர் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவு வழங்கியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் கூட்டத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com