ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா

வாடானை, நவ.14: குழந்தைகள் தின விழாவையொட்டி புதன்கிழமை ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக்

திருவாடானை, நவ.14: குழந்தைகள் தின விழாவையொட்டி புதன்கிழமை ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையிலிருந்து அன்பு இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு, தேவையான பொருள்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.மதுசூதனன் தலைமை வகித்தார். தாளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையிலிருந்து ஆதரவற்ற சிறுவர்களுக்கு தேவைப்படும் பொருள்களான  டிபன்பாக்ஸ், தண்ணீர் கேன், தலையணை, உடைகள், நோட்டுப் புத்தகங்கள், பென்சில் மற்றும் தலையணை உள்ளிட்ட பொருள்களை வழங்கினர்.
 பின்னர் ராமநாதபுரம் அரண்மனை சாலை, நகைக்கடை வீதி மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று குழந்தைகள் தினத்தையொட்டி கையில் கட்டும்  ரப்பர் பேண்டை அணிவித்தனர். முன்னதாக துணை முதல்வர் சாந்தி வரவேற்றார். பள்ளி மேலாளர் பானுமதி நன்றி கூறினார்.
ராமேசுவரம்: ராமேசுவரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் புதுரோடு மீனவ கிராமத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. 
இதற்கு ராமேசுவரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். வழக்குரைஞர் சங்கத்தலைவர் ஜோதிமுருகன் மற்றும் மூத்த வழக்குரைஞர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு மற்றும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நீதிமன்ற நடுவர் ஸ்ரீதேவி பரிசுக் கோப்பை வழங்கிப் பேசினார். முன்னதாக தலைமை ஆசிரியர் ஜோதிவேலு வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் உமையராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ஜோ.பி. பிலோமின் செய்திருந்தார்.
திருவாடானை: திருவாடானை அருகே திணைகாத்தான் வயல் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடைபெற்றன. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பற்றி கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. அதேபோல் தொண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்ட் எமர்சன் தலைமை வகித்தார். நம்புதாளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியர் தாமஸ் தலைமை வகித்தார். நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்  ஆத்மநாதன் முன்னிலை வகித்தார். இதில் நேருவை பற்றி பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில்  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கமுதி: கமுதி கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை குழந்தைகள் தின விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு பள்ளித் தாளாளர் அப்துல் ரகுமான் தலைமையும், பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் இஸ்மாயில், பொருளாளர் அல்லா பக்ஸ், உதவித் தலைமை ஆசிரியர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். பள்ளியில் படிக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் இந்தாண்டு வரும் அரசு தேர்வில் அதிக கவனம் செலுத்துவது, மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியளித்து தயார் செய்வது பற்றி  ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடையே ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியை அ.ஜெரினா பேகம் வரவேற்றார்.
முதுகுளத்தூர்: கடலாடி ஊராட்சி ஒன்றியம்  கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை பொன்பிரிதாபால் தலைமையிலும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பத்மநாதன் முன்னிலையிலும் குழந்தைகள் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியை சற்பிரசாத மேரி தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டீஸ்வரி, வசந்தபாரதி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நரசிங்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன் தலைமையில் மாணவர்கள் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். சாயல்குடி அருகே உச்சிநத்தம் ஸ்ரீஆறுமுகவிலாஸ் இந்து தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைகள் தின விழாவை கொண்டாடின.விழாவுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் 
பயிற்றுநர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ரபீக் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளர் காந்திராஜன் தலைமை வகித்தார்.  காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்ப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் கு.பாண்டியன் தலைமை வகித்தார். ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். 
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி, பள்ளி வகுப்பறை வளாகம் தூய்மைப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சியும், பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமும் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com