திருவாடானை பகுதியில் கேழ்வரகு, நெற்பயிரில் பூச்சி நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை

திருவாடானை பகுதியில் விவசாயிகளுக்கு கேழ்வரகு, நெற் பயிரில் பூச்சி நோயைக் கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி

திருவாடானை பகுதியில் விவசாயிகளுக்கு கேழ்வரகு, நெற் பயிரில் பூச்சி நோயைக் கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி கெரிசோன் தங்கராஜ் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
     இது குறித்து அவர் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் 20,550 ஹெக்டேருக்கும் மேலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, மேகமூட்டமாக இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இலை சுருட்டுப்புழு நோய்த் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இதனால் பச்சை இலைகள் வெண்ணிறமாக மாறிவிடும்.
     இதைக் கட்டுப்படுத்த புரோபானோபாஸ் 50 இசி 400 மி.லி. ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர், பிப்ரோபெஸின் 25 எஸ்சி 200 மி.லி. ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர், குளோரின் பைரிபாஸ் 500 மி.லி. ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர், அசார்டிக்டின் எஸ்சி 500 மி.லி. ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கவேண்டும். 
    தற்போது, கேழ்வரகு பயிரில் குலை நோய் தாக்குதல் தென்படுகிறது. அதனைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 சதவீதம் 200 கிராம் அல்லது கார்பன்டாசிம் 50 சதவீதம் 200 கிராம் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். 
    மேலும், நிலத்தில் சத்து பற்றாக்குறை காரணமாக இலைகள் ஆங்காங்கே திட்டுத்திட்டாக வெளிரிய மஞ்சள் நிறமாகவும் பயிர் வளர்ச்சி இல்லாமலும் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த சிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வீதமும், நெல் பயிருக்கு நெல் நுண்ணூட்ட உரம் ஏக்கருக்கு 5 கிலோ வீதமும் 10 கிலோ மணலுடன் கலந்து இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.     மேலும் விவரங்களுக்கு, திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com