கமுதியில் பிஎஸ்என்எல் இணைப்பு துண்டிப்பு: 3 நாள்களாக வங்கி, அரசு அலுவலக பணிகள் பாதிப்பு

கமுதியில் பிஎஸ்என்எல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாள்களாக வங்கி, அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கமுதியில் பிஎஸ்என்எல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 நாள்களாக வங்கி, அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கமுதி பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி என 10-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் வங்கிகள், பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிஎஸ்என்எல் இணையதள சேவையானது கடந்த 15 ஆம் தேதி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் பணப்பரிமாற்றம், தாலுகா, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி அலுவலகங்களிலிருந்து தலைமை அலுவலகங்களுக்கு தகவல் பரிமாற்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், வாங்கி வாடிக்கையாளர்கள், அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு சேவைகளுக்காக வரும் பயனாளிகள் கடந்த 3 நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தலையிட்டு கமுதி பகுதியில் பிஎஸ்என்எல் இணையதள சேவை சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com